பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடியின் 79-வது சுதந்திர தின உரை: 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட உரை

Posted On: 15 AUG 2025 11:58AM by PIB Chennai

நாட்டின் 79-வது சுதந்திர தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து தமது மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையை 103 நிமிடங்கள் நிகழ்த்தினார். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல்திட்டத்தை அவர் வழங்கினார். தற்சார்பு, புதுமை மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக இந்தியா பயணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார் .

முக்கிய சிறப்பம்சங்களும் அறிவிப்புகளும்:

1. மிரட்டல் இல்லை, சமரசமும் இல்லை: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையின் நிரூபணமாக அமைந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி, இந்த நடவடிக்கை பயங்கரவாத கட்டமைப்புகளையும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பையும் அழித்தது. அணு ஆயுத மிரட்டல் அல்லது வெளிநாட்டு விதிமுறைகளின் அச்சுறுத்தல்களை இந்தியா இனி பொறுத்துக் கொள்ளாது.

* சிந்து நதி நீர் ஒப்பந்தம்: ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது என்று இந்தியா இப்போது முடிவு செய்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் அநீதியானது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

2. தற்சார்பு இந்தியா - தொழில்நுட்பத்தையும், தொழில்துறையையும் வலுப்படுத்துதல்: மற்றவர்களைச் சார்ந்திருப்பது ஒரு நாட்டின் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. சார்பு ஒரு பழக்கமாக மாறும்போது அது ஆபத்தாகிறது. அதனால் நாம் தற்சார்புடையவர்களாக மாறுவதில் விழிப்புணர்வையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும்.

 

  • 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைக்கடத்தி சிப் பயன்பாட்டுக்கு வரும்
  • ஒவ்வொரு நபரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்கேற்க வேண்டும்.
  • அரிய கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தின் மூலம், எரிசக்தி, தொழில், பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கனிமங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக நாடு 1,200 தளங்களை ஆராய்ந்து வருகிறது.
  • தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி இயக்கம் இந்தியாவின் கடல்சார் எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி, எரிசக்தி தன்னிறைவை அதிகரிக்கும். வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும்.
  • மருந்துகள் துறையில் தன்னிறைவு அடைய வேண்டும்புதிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகளை இந்தியாவில் முழுமையாக உருவாக்க வேண்டியது அவசியம்.

4. சுதர்ஷன் சக்ரா இயக்கம்: இந்தியாவின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த சுதர்ஷன் சக்ரா இயக்கம் தொடங்கப்படுகிறது.

5. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்: பொருளாதார நடவடிக்கைகளை நிர்வகிக்கும் சட்டங்கள், விதிகள், நடைமுறைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களுக்கான  பணிக்குழு உருவாக்கப்படும்.

6. வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இளைஞர்களுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம்: நாட்டின் இளைஞர்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்ய, 1 லட்சம் கோடி மதிப்பில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இளைஞர்களுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் கீழ் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள் 15,000 பெறுவார்கள். இது 3 கோடி இளம் இந்தியர்களுக்குப் பயனளிக்கும்.

7. எரிசக்தியிலும் அணுசக்தியிலும் தன்னிறைவு: தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கத்தின் மூலம், எரிசக்தி, தொழில், பாதுகாப்புக்குத் தேவையான கனிமங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக நாடு 1,200 தளங்களை ஆராய்ந்து வருகிறது.

* 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணு மின் உற்பத்தி திறனை பத்து மடங்கு அதிகரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

8. விண்வெளித் துறையில் சாதனை: இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 300-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இப்போது செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, அதிநவீன ஆராய்ச்சியில் புதுமைகள் ஆகியவற்றைச் செய்து வருகின்றன. இது இந்தியா உலகளாவிய விண்வெளி அரங்கில் முன்னணியில் உள்ளதை நிரூபிக்கிறது.

9. விவசாயிகள், இந்தியாவின் செழிப்பின் முதுகெலும்பு: விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்யாது. விவசாயிகளின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் உறுதியுடன் பாதுகாக்கப்படும்.

10. தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல்: இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது முக்கியம். சட்டவிரோத ஊடுருவலால் சவால்கள் ஏற்படுகின்றன. எல்லைப் பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்தக் கவலைகளைத் தீர்க்க உயர் அதிகார மக்கள்தொகை இயக்கம் நடத்தப்படும்.

* நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டுக்குள் அனைவரும் இணைந்து வளமான, சக்திவாய்ந்த வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.

***

(Release ID: 2156736)

AD/PLM/RJ


(Release ID: 2157000)