கலாசாரத்துறை அமைச்சகம்
ஒருங்கிணைந்த அறிவியல், கலாச்சார தளத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
13 AUG 2025 4:11PM by PIB Chennai
கலாச்சார அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் தன்னாட்சி அறக்கட்டளையாக செயல்படும் இந்திராகாந்தி தேசிய கலைகள் மையம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக லக்னோவில் செயல்படும் பீர்பால் சஹானி தொல்பொருள் அறிவியல் நிறுவனத்துடன் இன்று புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு நாட்டின் அறிவியல் மற்றும் கலாச்சார சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் ஒருங்கிணைந்த அறிவியல், கலாச்சார தளத்தை உருவாக்குவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக பீர்பால் சஹானி தொல்பொருள் அறிவியல் நிறுவன இயக்குநர் பேராசிரியர் மகேஷ் ஜி.தாக்கர் கலந்து கொண்டார். மேலும் இந்திராகாந்தி தேசிய கலைகள் மையத்தின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி, மையத்தின் துறைத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பலதுறை ஆராய்ச்சிகள், கூட்டுநிகழ்வுகள் மற்றும் நிபுணத்துவ பகிர்வுகள் மேற்கொள்ளப்படும். ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், பாதுகாப்பு, அருங்காட்சியக மேம்பாடு, களப்பணி, ஒலி-ஒளிப் பதிவுகள், வெளியீடுகள், பயிற்சி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய செயல்பாடுகளை இரண்டு அமைப்புகளும் கூட்டாக மேற்கொள்ளும்.
இந்த நிகழ்வின் போது உரையாற்றிய பேராசிரியர் மகேஷ் ஜி.தாக்கர், நமது வரலாறு மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்வதற்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் அவற்றை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இது இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்திராகாந்தி தேசிய கலைகள் மையம் ஒரு கப்பல் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே காட்சிக்குத் தெரிவதாகவும் மூன்றில் இரண்டு பங்கு மறைந்திருப்பதாகவும் அதாவது நமது பரந்துபட்ட கலாச்சார அம்சங்களில் பெரும்பகுதி இன்னமும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று கலைகள் மைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி குறிப்பிட்டார்.
***
(Release ID: 2156051)
AD/TS/DL
(Release ID: 2156147)