சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உணவுப் பொருட்களுக்கான முத்திரைகள் மற்றும் விளம்பரங்களில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய விவாத நிகழ்வு
Posted On:
13 AUG 2025 5:51PM by PIB Chennai
இந்தியாவில் உணவுப் பொருட்களுக்கான முத்திரை, மற்றும் விளம்பரங்களில் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் உணவுப் பொருட்களுக்கான முத்திரை, விளம்பரம் போன்றவைகளுக்கான ஒழுங்குமுறை அமைப்புகள் குறித்த விரிவான விவாதம் புதுதில்லியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அறிவியல் நிபுணர்கள், உணவுத் துறை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், தொழில்துறை சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 700 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களை சர்வதேச தரத்துடன் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வது, இத்துறை எதிர்கொண்டு வரும் சவால்களுக்குத் தீர்வு காண்பது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது, நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவது, புதிய கண்டுபிடிப்பு போன்ற அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156114
----
AD/SV/KPG/DL
(Release ID: 2156146)