மத்திய அமைச்சரவை
ஒடிசா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 4600 கோடி மதிப்பில் குறைக்கடத்தி உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
12 AUG 2025 3:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் கீழ், மேலும் நான்கு குறைக்கடத்தி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் குறைக்கடத்தி சூழல் அமைப்பு வளர்ச்சியடைந்து வருகிறது. ஆறு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிக்செம், காண்டினென்டல் டிவைஸ் இந்திய தனியார் நிறுவனம் (சிடிஐஎல்), 3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்றும் அட்வான்ஸ் சிஸ்டம்-இன் பேக்கேஜ் டெக்னாலாஜிஸ் ஆகிய நான்கு பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நான்கு திட்டங்களும் சுமார் ரூ.4,600 கோடி மொத்த முதலீட்டில் குறைக்கடத்தி உற்பத்தி வசதிகளை அமைக்கும். மேலும் 2034 திறமையான நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பை ஊக்குவிக்கும். இதன் காரணமாக பல்வேறு மறைமுக வேலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். இன்று இந்த நான்கு ஒப்புதல்களுடன், இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளன. 6 மாநிலங்களில் சுமார் ரூ.1.60 லட்சம் கோடி முதலீடுகளில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு, வாகனம், தரவு மையங்கள், நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் தொழில்துறை மின்னணுவியல் ஆகியவற்றில் குறைக்கடத்திகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த நான்கு புதிய ஒப்புதல் அளிக்கப்பட்ட குறைக்கடத்தி திட்டங்கள் தற்சார்பு பாரதத்தை உருவாக்குவதற்கு கணிசமாக பங்களிப்பை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155456
***
(Release ID: 2155456)
AD/IR/SG/RJ
(Release ID: 2155709)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam