பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 4.05 கோடி பயனாளிகள் பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர்

Posted On: 08 AUG 2025 2:50PM by PIB Chennai

பிரதமரின் கர்ப்பிணி  பெண்களுக்கான  நலத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை  4.05 கோடிக்கும் அதிகமான பயனாளிகள்  பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர்.  இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 72.22 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், பழங்குடியின தாய்மார்கள் என அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு பேறுகால சுகாதார சேவைகள் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து தொடர்பான சவால்களுக்கு இரண்டாம் கட்ட ஊட்டச் சத்து இயக்கத்தின் கீழ், அங்கன்வாடி சேவைகள் ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் வளரிளம் பருவ பெண்களுக்கான நலத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக ஆறுமாதம் முதல் ஆறுவயது வரையிலான குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர்  திருமதி சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154081

***

VL/SV/KPG/SG

 


(Release ID: 2154271)