சுற்றுலா அமைச்சகம்
இந்தியாவில் அதிகரித்து வரும் மருத்துவச் சுற்றுலா
Posted On:
07 AUG 2025 4:17PM by PIB Chennai
மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்தியச் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 1,31,856 வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மருத்துவச் சுற்றுலா உட்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், விமான சேவைகள், வர்த்தக முகமைகள், சேவை வழங்குநர்கள், ஒழுங்கு முறை முகமைகள் போன்ற பல்வேறு துறைகளின் மூலம் உகந்த சூழல் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மின்னணு மருத்துவ விசா 171 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2153611)
AD/SM/SV/SG/KR/DL
(Release ID: 2153823)