மத்திய பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாட்டிலுள்ள மகளிர் தலைமையிலான வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள்
Posted On:
05 AUG 2025 3:33PM by PIB Chennai
நாட்டில் 10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் திட்டத்தின் கீழ் மகளிர் தலைமையில் 1663 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருவதாக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் உறுப்பினர் செல்வி ஜோதிமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் 60 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் இருப்பதாக கூறினார். மேலும் நாட்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட 949 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் இருப்பதாக தெரிவித்த அவர், இதில் தமிழ்நாட்டில் 111 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார்.
30.06.2025 வரை 2360 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 3212 கடன் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரூ.708.26 கோடி கடன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.593.75 கோடி உத்தரவாதத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
***
AD/IR/AG/DL
(Release ID: 2153228)