மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டத்திற்கு ரூ.6,520 கோடி கூடுதலாக ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 31 JUL 2025 3:04PM by PIB Chennai

பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டத்திற்கு ரூ.6,520 கோடி கூடுதலாக ஒதுக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 15-வது நிதிக் குழுவின் சுழற்சிக் காலத்தில் (2021-22 முதல் 2025-26 வரை)  செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டமான பிரதமரின் விவசாயிகள் நலத் திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.1,920 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கூடுதல் ஒதுக்கீட்டில், ஒருங்கிணைந்த குளிர்பதன தொடர் மற்றும் மதிப்பு கூடுதல் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 50 பலவகை உணவுப் பொருள்களின் கதிர்வீச்சு நீக்க அலகுகள் அமைப்பதற்கான ரூ.1,000 கோடி நிதியுதவியும் அடங்கும். பட்ஜெட் அறிவிப்புக்கு ஏற்ப இந்தத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரவு உத்தரவாத உள்கட்டமைப்பின் கீழ், 100 உணவு பரிசோதனை கூடங்கள் அமைக்கப்படும்.  15-வது நிதிக்குழு சுழற்சிக் காலத்தில் பல்வேறு கூட்டுத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.920 கோடி செலவிடப்படும்.

50 பலவகை உணவுப் பொருள்களின் கதிர்வீச்சு நீக்க அலகுகள் அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு 20 முதல் 30 லட்சம் டன் வரை உணவுப் பொருட்கள் கூடுதலாக கதிர்வீச்சு நீக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 2150644)

AD/SMB/KPG/KR


(Release ID: 2152425)