உள்துறை அமைச்சகம்
2024-25 ஆண்டிற்கான ஈவுத்தொகை ரூ.22.90 கோடிக்கான காசோலையை ரெப்கோ வங்கி புதுதில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷாவிடம் வழங்கியது
கூட்டுறவு வங்கியின் வரலாற்றில் உச்சநிலை சாதனையாக 2024-25 நிதியாண்டில் ரூ.140 கோடி லாபம் ஈட்டியதற்காக ரெப்கோ வங்கிக் குழுவினருக்கு உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
Posted On:
04 AUG 2025 5:25PM by PIB Chennai
2024-25 ஆண்டிற்கான ஈவுத்தொகை ரூ.22.90 கோடிக்கான காசோலையை ரெப்கோ வங்கி புதுதில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷாவிடம் வழங்கியது. கூட்டுறவு வங்கியின் வரலாற்றில் உச்சநிலை சாதனையாக 2024-25 நிதியாண்டில் ரூ.140 கோடி லாபம் ஈட்டியதற்காக ரெப்கோ வங்கிக் குழுவினருக்கு உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவில் திரு அமித் ஷா உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வங்கியானது கூட்டுறவுத்துறைக்கு திறன்மிகுந்த செயல்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிபுணத்துவம் ஆகியவற்றிற்கான ஒரு முன்மாதிரியை நிர்ணயித்து உள்ளது. குழுவினரின் எதிர்காலப் பயணத்திற்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரெப்கோ வங்கியின் தலைவர் திரு இ.சந்தானம், ரெப்கோ வங்கி இயக்குனரும் ரெப்கோ வீட்டுவசதி நிதி லிமிடெட் தலைவருமான திரு சி.தங்கராசு மற்றும் நிர்வாக இயக்குனர் திரு ஓ.எம்.கோகுல் ஆகியோர் காசோலையை அமைச்சரிடம் வழங்கினர். மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், எல்லைப்புற மேலாண்மை செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார் ஆகியோரும் அப்பொழுது உடன் இருந்தனர்.
ரெப்கோ வங்கி ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும். அதன் பங்குகளில் இந்திய அரசு 50.08% பங்குகளை வைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ரெப்கோ வங்கி ரூ.140 கோடி நிகர லாபம் ஈட்டி அதில் 30% தொகையை ஈவுத்தொகையாக வழங்கி உள்ளது.
***
(Release ID: 2152171)
AD/TS/DL
(Release ID: 2152367)
Visitor Counter : 12