பாதுகாப்பு அமைச்சகம்
சென்னை ஐஐடியில் அக்னிஷோத் ஆராய்ச்சி பிரிவை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தொடங்கிவைத்தார்
Posted On:
04 AUG 2025 5:49PM by PIB Chennai
பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தற்சார்பை அடையும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் இந்திய ராணுவம் அக்னிஷோத் என்ற இந்திய ராணுவ ஆராய்ச்சி பிரிவைத் தொடங்கியுள்ளது. இதை சென்னையில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு வரும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி இன்று (04.08.2025) தொடங்கிவைத்தார்.
இம்முயற்சி இந்திய ராணுவத்தின் பரந்த அளவிலான மாற்றமிகு கட்டமைப்பு பகுதியின் ஒரு முயற்சியாகும். இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெனரல் உபேந்திர திவிவேதி, “ஆபரேஷன் சிந்தூர்- பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியப் போரின் புதிய அத்தியாயம்” என்ற தலைப்பில் உரையாடினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை மறுவரையறை செய்த நுண்ணறிவுமிக்க பதில் தாக்குதல் என்று தெரிவித்தார். மாறிவரும் போரின் தன்மை குறித்து குறிப்பிட்ட அவர், மறைமுக போர், உளவியல் சார்ந்த முறை உள்ளிட்ட 5-ம் தலைமுறை மோதல்களுக்கு இந்திய ஆயுதப்படை தயாராக உள்ளதாக கூறினார். ஐஐடி தில்லி, ஐஐடி கான்பூர், பெங்களூரூவில் உள்ள ஐஐஎஸ்சி ஆகியவற்றில் உள்ள இந்திய ராணுவப் பிரிவுகள் கல்வி புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் மேற்கொண்ட திட்டங்களை அவர் பாராட்டினார். பாதுகாப்பு ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்படுவதாக சென்னை ஐஐடியை தாம் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
***
(Release ID: 2152204)
AD/IR/AG/DL
(Release ID: 2152281)