ரெயில்வே அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பாவ்நகரில் வர்த்தகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய குடிமக்களுடன் வளர்ச்சியடைந்த இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியை நடத்தினார்
Posted On:
03 AUG 2025 8:40PM by PIB Chennai
மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பாவ்நகரில் உள்ள இஸ்கான் ஃபெர்னில் வர்த்தகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய குடிமக்களுடன் வளர்ச்சியடைந்த இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியை நடத்தினார். தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் பம்பானியா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வலுவான மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் பொருளாதாரம் குறித்துப் பேசிய ரயில்வே அமைச்சர், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், இந்தியா அதன் வளர்ச்சி விகிதத்தில் தொடர்ச்சியான உயர்வைக் கண்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மார்ச் 31, 2025 நிலவரப்படி ₹331 லட்சம் கோடி மதிப்புடைய பொருளாதாரத்துடன், இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்து மற்றும் திறன்களை எடுத்துரைத்த அமைச்சர், உள்நாட்டு உற்பத்தி பற்றிய நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொண்டார். வந்தே பாரத் ரயிலின் அம்சங்களை அவர் விரிவாகக் கூறினார், இது நவீன வசதிகளுடன் கூடிய முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, உலகத்தரம் வாய்ந்த ரயில் என்பதை வலியுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்கை உணர தேசிய இயக்கத்தில் பங்கேற்க குடிமக்களை அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, பாவ்நகருடன் திரு வைஷ்ணவின் நீண்டகால தொடர்பை நினைவு கூர்ந்தார், அவரது வருகைக்கு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார். வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறுவதற்கான பயணத்தின் பின்னணியில், பாவ்நகரின் வளர்ச்சிக்கான அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து குடிமக்களுக்குத் தெரிவிக்க இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2151989
***
(Release ID: 2151989)
AD/BR/KR
(Release ID: 2152013)