சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் குழந்தைகளுக்கு 11 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன

प्रविष्टि तिथि: 01 AUG 2025 2:29PM by PIB Chennai

நாட்டில் தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் குழந்தைகளுக்கு 11 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாராந்திர அடிப்படையில் வழக்கமான நோய்த்தடுப்பு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு அமர்வுக்கும் முன்பும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆஷா பணியாளர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி அமர்வு தளம் குறித்து பயனாளிகளுக்குத் தெரிவிக்கவும், தடுப்பூசி நாளில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கவும் செய்கிறார். நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நாடு முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஊடக பிரபலங்கள், வானொலி ஜிங்கிள்கள் மற்றும் யூடியூப் பாட்காஸ்ட்களைப் பயன்படுத்தி தூர்தர்ஷன் போன்ற சேவை ஒளிபரப்பாளர்கள் மூலம் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. எக்ஸ் வலைதளம், இன்ஸ்டாகிராம் வலைதளம் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடக தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒலிபெருக்கிகள், சுவரொட்டிகள் மற்றும் குழு கூட்டங்கள் போன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட சமூக அளவிலான செயல்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தடுப்பூசி பிரச்சாரம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்ற அரசாங்கம் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் அனைத்து தடுப்பூசி நிகழ்வுகளையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் யு-வின் வலைதளத்தை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2151236)

AD/SM/KR

 


(रिलीज़ आईडी: 2151271) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu