கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்குப் பகுதியில் கல்வி மேம்பாடு குறித்த கண்காட்சி - ஆகஸ்ட் 8 அன்று நடத்துகிறது தேசிய ஆவணக் காப்பகம்

Posted On: 31 JUL 2025 1:28PM by PIB Chennai

நாகாலாந்தின் உயர்கல்வித் துறையுடன் இணைந்து தேசிய ஆவணக் காப்பகம் 2025 ஆகஸ்ட் 8, 2025 அன்று ‘வடகிழக்கு இந்தியாவில் கல்வி மேம்பாடு’ குறித்த கண்காட்சியை நடத்துகிறது. நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் இக்கண்காட்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார்.  நாகாலாந்து உயர்கல்வி அமைச்சர் திரு டெம்ஜென் இம்னா அலோங், கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் ஆவணக் காப்பக தலைமை இயக்குநர் திரு சமர் நந்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கண்காட்சி, பழங்குடி மரபுகள், மொழியியல் பன்முகத்தன்மை, காலனித்துவ மரபுகள், சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சி ஆகியவை குறித்த விரிவான பார்வையை வழங்கும். வடகிழக்கு இந்தியாவின் கல்வி பரிணாமம், பழங்குடி மக்களின் வாய்வழி கற்றல் முதல் நவீன பல்கலைக்கழகங்கள் வரையிலான வேர்களைக் கண்டறிந்து, பழங்குடி சமூக அறிவு அமைப்புகள் மற்றும் முறையான கல்வி நிறுவனங்களின் கலவையை இது பிரதிபலிக்கும். வடகிழக்குப் பிராந்தியத்தின் கல்விச் சூழலில் முக்கிய மைல்கற்களை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டும்.

****

(Release ID: 2150605)

AD/SM/PLM/KR


(Release ID: 2150678)