குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மருத்துவர்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து முக்கியப் பங்காற்றுகின்றனர் – குடியரசுத்தலைவர்

Posted On: 30 JUL 2025 5:37PM by PIB Chennai

கல்யாணியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று பங்கேற்றார்.  அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியில் மருத்துவர்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து முக்கியப் பங்காற்றுவதாக தெரிவித்தார். சுதந்திரம் பெற்ற காலத்தில் சராசரி ஆயுள் காலம் 32 ஆண்டுகளாக இருந்த நிலையில்,  தற்போது அது 70 ஆண்டுகளாக இரட்டிப்பாகியுள்ளது என்று கூறினார். கடந்த சில ஆண்டுகளில் தடுப்பூசித் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு நோய்கள் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ட்ரக்கோமா என்னும் கண் நோய் இந்தியாவில்  ஒழிக்கப்பட்டுவிட்டதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் இளம் மருத்துவர்களுக்கு இன்னும் பல்வேறு சவால்கள் உள்ளதாகவும் நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய், உடல் பருமன் போன்ற உடல்நல குறைபாடுகளை கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும்  மற்ற துறையினரைவிட மருத்துவர்களுக்கு மிகப் பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

கல்யாணியின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் பிரிவு மாணவர்கள் இந்நிறுவனத்தின் மிக மூத்த மாணவர்கள் என்று அவர் தெரிவித்தார். இக்கல்வி நிறுவனத்தின் அடையாளத்தை வரையறுப்பதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த மருத்துவக் கல்லூரியின் எதிர்காலத்தை வரையறுப்பவர்களாகவும் அவர்கள்  உள்ளதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150277

***

AD/IR/KPG/DL


(Release ID: 2150380)