சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தவிர்க்க நடவடிக்கை: மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்
Posted On:
28 JUL 2025 3:52PM by PIB Chennai
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 2019-20 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கு இடையில் பல்வேறு மாநிலங்களில் ரயில் மோதிய விபத்தில் மொத்தம் 81 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து, ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டங்களை நடத்துவது உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. யானை வாழ்விடங்களில் வேகக் கட்டுப்பாடுகள், நில அதிர்வு சென்சார் அடிப்படையிலான யானைகளைக் கண்டறிதல், சுரங்கப்பாதைகள், சாய்வுதளங்கள், வேலி அமைத்தல் போன்ற முன்னோடித் திட்டங்கள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யானை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ரயில்வே அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் நடத்தப்பட்டன.
மொத்தம் 3,452.4 கி.மீ நீளமுள்ள 127 அடையாளம் காணப்பட்ட ரயில் பாதைகளில் கள ஆய்வுகளுக்குப் பிறகு, அந்த ரயில் பாதைகளில் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் ரயில்களில் மோதுவதை தடுக்கும் வகையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149284
***
AD/IR/RJ/KR/DL
(Release ID: 2149425)