தேர்தல் ஆணையம்
பீகாரில் வாக்காளர் சிறப்புத் திருத்தம் தொடர்பான முக்கிய தகவல்கள்
Posted On:
27 JUL 2025 5:51PM by PIB Chennai
பீகாரில் வாக்காளர் சிறப்புத் திருத்தம் தொடர்பான சில முக்கிய தகவல்கள்:
- வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள் - 7.24 கோடி (91.69%)
* இறந்தவர்கள் - 22 லட்சம் (2.83%)
* நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் அல்லது அவர்கள் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க முடியாதவர்களின் எண்ணிக்கை - 36 லட்சம் (4.59%)
* வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் பதிவு செய்து இருந்தவர்கள் - 7 லட்சம் (0.89%)
குறிப்பிட்ட சில வாக்காளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது அவர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை வழங்கவில்லை.
ஏனெனில் அவர்கள்:
* பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களாக மாறியிருக்கலாம்
அல்லது
* இருப்பிடத்தில் இல்லை
அல்லது
* 2025 ஜூலை 25 வரை படிவத்தை சமர்ப்பிக்கவில்லை
அல்லது
* வேறு ஏதேனும் காரணத்திற்காக வாக்காளராகப் பதிவு செய்ய விருப்பமில்லை.
2025 ஆகஸ்ட் 1- க்குள் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளால் (ERO/AERO) படிவங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு வாக்காளர்களின் சரியான நிலை அறியப்படும் . இருப்பினும், 2025 ஆகஸ்ட் 1 முதல் 2025 செப்டம்பர் 1 வரையிலான உரிமைகோரல்களின்படி, ஆட்சேபனை காலத்தில் உண்மையான வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும் . வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர் ஒரே இடத்தில் மட்டுமே தக்கவைக்கப்படும். இந்த சிறப்புத் திருத்தத்தின் முதல் நோக்கம் தகுதியான அனைத்து வாக்காளர்களின் பங்கேற்பை உறுதி செய்வதாகும். 24.06.2025 நிலவரப்படி பீகாரில் 7.89 கோடி வாக்காளர்களில், 7.24 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்புப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
*****
(Release ID: 2149091)
AD/PLM/RJ
(Release ID: 2149129)