ஊரக வளர்ச்சி அமைச்சகம்
“பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் ‘ காப்பீட்டு தோழி திட்டம் ’ வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கம்” – திரு சிவராஜ் சிங் சௌஹான்
Posted On:
26 JUL 2025 4:26PM by PIB Chennai
“பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் ‘ காப்பீட்டு தோழி திட்டத்தின்’ வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்தை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் மட்டுமல்லாமல், கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புற இந்தியாவிற்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதிலும் ஒரு பெரிய படியாகும். நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தன்னிறைவு பெற்றவர்களாகவும் பொருளாதார ரீதியாக வலிமையானவர்களாகவும் மாற்றுவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது” மத்திய கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் கூறியுள்ளார்.
இந்திய அரசின் ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒரு முக்கியமான கூட்டாண்மையில் நுழைந்துள்ளதாகவும் திரு சௌஹான் கூறினார். தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் நிதி உள்ளடக்க முயற்சியின் கீழ், நாடு முழுவதும் உள்ள சுய உதவிக்குழுக்களில் பயிற்சி பெற்ற பெண்கள் கிராம பஞ்சாயத்து மட்டத்தில் காப்பீட்டு தோழிகளாக நியமிக்கப்படுவார்கள்.
இத்திட்டம் பெண்களின் தொழில்முனைவு மற்றும் நிதி சுதந்திரத்திற்கான ஒரு வலுவான தளமாகும். இது பிரதமர் மோடி வகுத்துள்ள தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று திரு சௌஹான் கூறினார்.
இந்தத் திட்டம் கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். காப்பீட்டு தோழிகளாக மாறுவதன் மூலம், பெண்கள் தொழில்முனைவோர் மற்றும் வருமானத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள், நாட்டில் லட்சாதிபதி சகோதரிகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் 2 கோடியை எட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
காப்பீட்டு தோழிகள் வெறும் முகவர்கள் மட்டுமல்ல, சமூக மாற்றத்தின் முன்னோடிகளும் ஆவர். அவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் நிதி பாதுகாப்பின் ஜோதியை எடுத்துச் செல்கிறார்கள், இதன் விளைவாக கிராமங்கள் பொருளாதார ரீதியாக வலுவாகவும், பெண்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறி வருகின்றனர். அனைத்து மாநிலங்களும் கூட்டாளி அமைப்புகளும் இந்த மக்கள் இயக்கத்தில் இணைந்து, இத்திட்டத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல உதவுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கம். அதன் ஆதரவுடன், ஒரு நெகிழ்ச்சியான, உள்ளடக்கிய மற்றும் காப்பீடு செய்யப்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கு நாங்கள் வலுவான பங்களிப்பைச் செய்வோம். இந்த முயற்சி நமது கிராமப்புற தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
*****
(Release ID: 2148859)
AD/PKV/SG
(Release ID: 2148903)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Bengali-TR
,
Kannada
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Urdu
,
Hindi
,
Gujarati
,
Odia
,
Malayalam