இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மை பாரத் தன்னார்வலர்கள் பங்கேற்ற கார்கில் வெற்றி தின பாதயாத்திரை - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, மத்திய இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமை வகித்தனர்
கார்கில் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு பகுதி மட்டுமல்ல, அது இந்தியாவின் அசைக்க முடியாத உறுதித் தன்மையின் அடையாளம் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா
Posted On:
26 JUL 2025 3:41PM by PIB Chennai
கார்கில் போரில், 1999-ம் ஆண்டு இந்தியா பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் 26-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் (மேரா யுவ பாரத்) தளம் சார்பில் இன்று (26.07.2025) கார்கிலின் திராஸில் 'கார்கில் வெற்றி தின பாதயாத்திரை' நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ஆகியோர் தலைமை வகித்தனர். 3,000-க்கும் மேற்பட்ட மை பாரத் இளைஞர் தன்னார்வலர்கள், ஆயுதப்படை வீரர்கள், தியாகிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.
ஹிமாபாஸ் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்திலிருந்து பிம்பெட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வரை 1.5 தூரம் கிலோமீட்டர் பாதயாத்திரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, கார்கில் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு பகுதி மட்டுமல்ல எனவும் அது இந்தியாவின் அசைக்க முடியாத உறுதித் தன்மையின் அடையாளமாகும் என்றும் குறிப்பிட்டார். நமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், இந்தியா ஒற்றுமையாகவும், உறுதியுடனும் உள்ளது என்பதை எடுத்துரைக்க இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். இந்தியா ஒருபோதும் மோதலை முதலில் தொடங்கியதில்லை எனவும் ஆனால் பிறர் தாக்கும்போது, தைரியத்துடனும் உறுதியுடனும் பதிலடி கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கார்கிலில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் விஜய், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை நாட்டின் ராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை என அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆயுதப் படைகள் தேசிய பெருமை, இறையாண்மை ஆகியவற்றின் உறுதியான பாதுகாவலர்களாக தொடர்ந்து செயல்படுவதாக திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
****
(Release ID: 2148849)
AD/PLM/SG
(Release ID: 2148902)