இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய ஊக்கமருந்து எதிர்ப்புப் பயிரங்கு - தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை புது தில்லியில் நடத்தியது

Posted On: 26 JUL 2025 10:43AM by PIB Chennai

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் (NADA), 2025 ஜூலை 21 முதல் 25 வரை புது தில்லியில் உலகளாவிய ஊக்கமருந்து எதிர்ப்பு தொடர்பான இரண்டாவது பயிலரங்கை நடத்தியது. உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், இந்தியா, மலேசியா, கம்போடியா, வியட்நாம், நேபாளம், மியான்மர், பூட்டான், பங்களாதேஷ், புருனே தாருஸ்ஸலாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புகளும், சட்ட அமலாக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், உலகளாவிய ஊக்கமருந்து எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள முன்னணி நிபுணர்களை இது ஒன்று திரட்டியது.

 

ஐந்து நாள் பயிலரங்கில், பங்கேற்பாளர்கள் உளவுத்துறை செயல்பாடுகள், புலனாய்வு முறைகள், ரகசிய ஆதாரங்களை நிர்வகித்தல்தகவல் சேகரிப்பு, பயனுள்ள பகுப்பாய்வு, நேர்காணல் நுட்பங்கள் போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய ஆழமான அமர்வுகளில் பங்கேற்றனர். விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்கும் நியாயமான, மதிப்புகளைப் பாதுகாப்பதற்கும் கூட்டு முயற்சிகளுக்கான தேவை குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

 

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் விளையாட்டுத் துறைச் செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ், கூட்டு முயற்சிகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த முக்கியமான பயிலரங்கை நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது என அவர் கூறினார்.

 

"இந்த ஆண்டு மே மாதம் முதல் பயிலரங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிறகு, பத்து தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட இந்த இரண்டாவது பயலரங்கு, உலகளாவிய ஊக்கமருந்து எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதல் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு முகமையின் தலைமை இயக்குநர் திரு அனந்த் குமார் கூறினார்.

***

(Release ID: 2148755)

AD/PLM/SG

 


(Release ID: 2148895)