பாதுகாப்பு அமைச்சகம்
பிஇஎல் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து
प्रविष्टि तिथि:
25 JUL 2025 3:16PM by PIB Chennai
இந்திய ராணுவத்திற்கான வான் பாதுகாப்பு தீயணைப்பு கட்டுப்பாட்டு ரேடார்களை வாங்குவதற்காக, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட ரேடார்களை ராணுவத்திற்காக வாங்கவுள்ளது. ஜூலை 25, 2025 அன்று புதுதில்லியில் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிஇஎல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
குறைந்தபட்சம் 70% உள்நாட்டு உள்ளடக்கத்துடன், இந்தத் தீயணைப்பு கட்டுப்பாட்டு ரேடார்களால் போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் எதிரி ட்ரோன்கள் உட்பட அனைத்து வகையான வான்வழி அச்சுறுத்தல்களையும் கண்டறிய முடியும். இது வான் பாதுகாப்பு படைப்பிரிவுகளின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும், மேலும் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.
உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் மூலப்பொருள் விநியோகம் மூலம் இந்திய எம்எஸ்எம்-க்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்களை மேம்படுத்துவதில் இந்தக் கொள்முதல் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
***
(Release ID: 2148334)
AD/PKV/SG/KR
(रिलीज़ आईडी: 2148415)
आगंतुक पटल : 6