இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சி
Posted On:
24 JUL 2025 5:14PM by PIB Chennai
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டியது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) பொறுப்பாகும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது (ஐஓசி) விரிவான தேர்ந்தெடுப்பு நடைமுறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமைகளை வழங்குகிறது. போட்டியை நடத்த இருக்கும் நாட்டை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை ஐஓசி வலைத்தளத்தின் பொதுப்பிரிவில் பார்க்கலாம். இந்திய ஒலிம்பிக் சங்கமானது போட்டியை நடத்துவதற்கு ஐஓசி-க்கு உத்தேச ஒப்புதல் கடிதத்தை அளித்துள்ளது. இது ஐஓசி-யின் எதிர்காலப் போட்டிகளை நடத்துவதற்கான ஆணையத்தின் ”தொடர் கலந்துரையாடல்” நிலையில் உள்ளது.
தொடர் கலந்துரையாடல் நடைமுறையின் ஒரு அங்கமாக அண்மைக்கால பங்கேற்புகளின் மூலம் ஆளுகை, ஊக்கமருந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன் ஆகிய மூன்று பிரச்சினைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.
இந்த பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டு விளையாட்டு அமைப்புகளை ஆளுகை செய்வதில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல், நியாயமான மற்றும் நேர்மையான விளையாட்டுச் சூழ்நிலையை உருவாக்குதல், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்களது செயல்திறனை அத்லெட்டுகள் சிறப்பாக வெளிப்படுத்த உதவுதல் ஆகியவற்றில் போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இத்தகவலை இளையோர் உறவுகள் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மான்சுக் மாண்டவியா இன்று மாநிலங்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2147807)
AD/TS/DL
(Release ID: 2148010)