குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவருடன் கலைஞர்கள் சந்திப்பு

Posted On: 24 JUL 2025 4:55PM by PIB Chennai

கலைஞர்கள் குழு, இன்று (ஜூலை 24, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தது. சோஹ்ராய், பட்டாசித்ரா மற்றும் பட்டுவா கலை வடிவங்களின் இருபத்தி ஒன்பது கலைஞர்கள் ஜூலை 14 முதல் 24, 2025 வரை குடியரசுத் தலைவர் மாளிகையில்  தங்கியிருந்தனர். ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தக் கலைஞர்கள் 'கலா உத்சவ் 2025' -ன் இரண்டாவது பதிப்பில் பங்கேற்றனர்.

 கலா உத்சவ் நிகழ்வு, இந்தியாவின் கலை மரபுகளின் உணர்வின் கொண்டாட்டமாகும், இது கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் எதிர்காலச் சந்ததியினரை ஊக்குவிப்பதிலும் வாழும் கலை மரபுகளின் முக்கிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் கலா உத்சவ், தலைமுறை தலைமுறையாக பல்வேறு கலை வடிவங்களைத் தொடர்ந்து வரும் நாட்டுப்புற, பழங்குடி மற்றும் பாரம்பரிய கலைஞர்களுக்கு ஒரு தளத்தையும் வழங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது உருவாக்கப்பட்ட கலைஞர்களின் கலைக் கண்காட்சியை குடியரசுத்தலைவர்  பார்வையிட்டார். இந்தியாவின் முக்கியமான பாரம்பரிய கலை வடிவங்களுக்கு அவர்கள் அளித்த பங்களிப்பைப் பாராட்டிய அவர், அவர்களின் எதிர்கால கலை முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்தினார்.

***

(Release ID: 2147793)

AD/PKV/DL


(Release ID: 2147968) Visitor Counter : 4