தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கிராமப்புறங்களில் இணையதள சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
Posted On:
24 JUL 2025 4:19PM by PIB Chennai
நாட்டில் இணையதள சேவை பயனாளர்களின் எண்ணிக்கை 969.10 மில்லியனாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் இணையதள சேவைகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இணையதள சேவைகள் கிடைக்காத கிராமப்புறங்களில் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுமை கண்டுபிடிப்புகள், மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 5 ஆண்டுகளில் 1,600 தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களை உருவாக்க ஏதுவாக 490 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு நகரங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக 104 நகரங்களில் 246 புதிய அலகுகளை உருவாக்குவதற்கான திட்டமும் இதில் அடங்கும்.
மத்திய அரசின் இத்தகைய முன்முயற்சிகள் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இணையதள சேவைகள் மேம்படும் என்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147761
***
AD/SV/KPG/DL
(Release ID: 2147957)