விண்வெளித்துறை
ஆந்திரப் பிரதேசத்தில் அரசு சாரா 11 விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன
Posted On:
24 JUL 2025 3:33PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேசத்தில் அரசு சாரா 11 விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவை மத்திய அரசின் இன்-ஸ்பேஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 9 நிறுவனங்கள் புத்தொழில் நிறுவனங்களாகும். இந்த 11 நிறுவனங்களில் ஒன்று மட்டும் இன்-ஸ்பேஸ் தளத்தின் மூலம் தொடக்கநிலை நிதியுதவியை பெற்றுள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கு 10 குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இன்-ஸ்பேஸ் நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் விண்வெளி தொழில்நுட்ப கல்வியை ஊக்கப்படுத்த தேசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பி.டெக். பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களை தொடங்க ஆர்வம் உள்ள மாநிலங்களை இன்-ஸ்பேஸ் அணுகி அவற்றுக்கு வழிகாட்டுதல், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி ஆகியவற்றை செய்கிறது.
மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147735
***
AD/SMB/AG/KR
(Release ID: 2147798)