ஜல்சக்தி அமைச்சகம்
பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் செயல்பாடு
Posted On:
24 JUL 2025 1:46PM by PIB Chennai
பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தை, 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்துவதற்காக, நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்த, 2021 டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது பின்னர் நடந்துகொண்டிருக்கும் பணிகள் முடியும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு வி. சோமன்னா இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியிருப்பதாவது;
நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையின் அறிக்கையின்படி, பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் 2015-16-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது, பண்ணையில் நீர் அணுகலை மேம்படுத்துதல் மற்றும் உறுதி செய்யப்பட்ட நீர்ப்பாசனத்தின் கீழ் சாகுபடி செய்யக்கூடிய பகுதியை விரிவுபடுத்துதல், பண்ணையில் நீர் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துதல், நிலையான நீர் பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் போன்றவை இதன் நோக்கம் ஆகும்.
நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதில் நிலம் கையகப்படுத்துதல் ஒரு முக்கிய தடையாகும். நிலத்தடி குழாய்கள் மூலம் சுமார் 55,290 கி.மீ. விநியோக கட்டமைப்பை நிர்மாணிப்பதன் மூலம், சுமார் 76,594 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துதல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், நீர் விநியோகம் மற்றும் நுண் நீர்ப்பாசனம் நீர் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்தியுள்ளது.
***
(Release ID: 2147696)
AD/PKV/KR
(Release ID: 2147723)