சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மூலம் 5 ஆண்டுகளில் 2.22 கோடி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்

Posted On: 23 JUL 2025 2:25PM by PIB Chennai

மெட்ரிக் படிப்பிற்கு பிறகான கல்வி உதவித்தொகைத் திட்டம் மற்றும் உயர்தர கல்வித்திட்டம் (டாப் கிளாஸ் கல்வித் திட்டம்) ஆகிய திட்டங்கள் வாயிலாக வழங்கப்படும் நிதிஉதவி மற்றும் கல்வி உதவித்தொகையானது பட்டியலின மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு அவர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கித் தருகின்றது.

பட்டியலின மாணவர்களின் நிதிச்சுமையை இந்தத் திட்டங்கள் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும் உதவுகிறது. கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை அதிகரிப்பதன் மூலம் இந்தத் திட்டங்கள் இம்மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதோடு பணிவாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மெட்ரிக் படிப்பிற்குப் பிறகான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2,22,31,139 பட்டியலின மாணவர்களும் உயர்தர கல்வித்திட்டத்தின் கீழ் 20,340 பட்டியலின மாணவர்களும் பலன் அடைந்துள்ளனர். இந்தத் திட்டங்களின் கீழ் பட்டியலின மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது கல்வியைத் தொடர்கின்றனர்.

இந்தத் தகவலை சமூகநீதி மற்றும் வேலைவாய்ப்பு இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே இன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2147212)

VL/TS/DL


(Release ID: 2147467)