கூட்டுறவு அமைச்சகம்
நாட்டின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்களைத் தொடங்க திட்டம்: நபார்டு
Posted On:
23 JUL 2025 1:20PM by PIB Chennai
தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் ஆதரவுடன், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ஐந்து ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பஞ்சாயத்துகள் / கிராமங்களை உள்ளடக்கிய 2 லட்சம் பல்நோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பால்வள மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதன் வாயிலாக, நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கும், அதன் செயல்பாடுகளை அடித்தளத்திலிருந்து விரிவுபடுத்துவதற்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 15.02.2023 - ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தை திறம்பட சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், மத்திய கூட்டுறவு அமைச்சகம், நபார்டு வங்கி, என்டிடிபி மற்றும் என்எஃப்டிபி ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து 19.9.2024 -ம் தேதி நிலையான செயல்பாட்டு நடைமுறையை (மார்க்தர்ஷிகா) அறிமுகப்படுத்தியுள்ளது. இது சம்பந்தப்பட்ட தரப்பினரின் இலக்குகள், காலக்கெடு, பங்களிப்பு மற்றும் பொறுப்புகளைக் குறிக்கிறது. மேலும், தொடக்க நிலையில் திட்டத்தை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட அளவில் கூட்டுப் பணிக்குழுக்கள் (ஜேடபிள்யூசி) மாநிலங்கள் /யூனியன் பிரதேச அரசுகளால் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தற்போதைய நிலையின்படி, செயல்படுத்துவதற்கான மாநில வாரியான இலக்குகள் /காலக்கெடுவின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்தும் வகையில், ₹ 2,925.39 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டிற்கு செயல்பாட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்குவதற்கான நிதியுதவி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து செயல்பாட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களையும் பொதுவான நிறுவன வள ஆதாரத் திட்டமிடல் (இஆர்பி) அடிப்படையிலான தேசிய மென்பொருள் உதவியுடன், அவற்றை மாநில மற்றும் மாவட்ட அளவிலான மத்திய கூட்டுறவு வங்கிகளை நபார்டு வங்கியுடன் இணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147171
***
VL/SV/KR
(Release ID: 2147374)