பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆழமற்ற நீர்நிலை போர்க்கப்பலான அஜய் இன்று செயல்படத் தொடங்கி வைக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 21 JUL 2025 5:21PM by PIB Chennai

உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆழமற்ற நீர்நிலை போர்க்கப்பலான அஜய் இன்று (21.7.2025) கொல்கத்தாவில் செயல்படத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த  வரிசையில் இது 8-வது மற்றும் கடைசி போர்க்கப்பலாகும். இதனை கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம் கட்டமைத்து வழங்கியுள்ளது. துவக்க நிகழ்ச்சிக்கு வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் முன்னிலை வகித்தார்.  கப்பற்படை வழக்கப்படி திருமதி பிரியா தேஷ்முக் இந்தக் கப்பலைத் தொடங்கி வைத்தார்.

அஜய் போர்க்கப்பல் செயல்படத் தொடங்கியது என்பது கப்பல் கட்டுமானம், தளவாடங்கள், தொலை உணர்வுகள், நவீன தகவல் தொடர்பு, மின்னணு போர் முறை போன்றவற்றில் தற்சார்பு அடைவதற்கான இந்தியக் கப்பல் படையின் தொடர் முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146420  

-----

AD/TS/SMB/KPG/DL


(रिलीज़ आईडी: 2146529) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi