தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 2025 மே மாதத்தில் சாதனை அளவாக 20.06 லட்சம் பேர் இணைந்துள்ளனர்

Posted On: 21 JUL 2025 3:51PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 2025 மே மாதத்தில் சாதனை அளவாக  20.06 லட்சம் பேர் இணைந்துள்ளனர். 9.42 லட்சம் புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.79 சதவீதம் அதிகமாகும். கடந்த 2024-ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 2.84 சதவீதம் அதிகமாகும்.

இச்சாதனை குறித்து குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக்  மாண்டவியா, 2025 மே மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக அளவில் பதிவு செய்துள்ளதன் மூலம் நாட்டில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு சூழலுக்கு இது சான்றாக உள்ளது என்று தெரிவித்தார்.

***

(Release ID: 2146353)

AD/TS/IR/AG/DL


(Release ID: 2146519)