சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாட்டின் மொத்த சதுப்பு நில பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு
Posted On:
21 JUL 2025 3:54PM by PIB Chennai
இந்திய வனநிலை அறிக்கை 2023-ன் படி நாட்டின் மொத்த சதுப்புநில(மாங்குரோவ்) பரப்பளவு 4,991.68 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இது 2019-ம் ஆண்டு இந்திய வனநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது நாட்டின் சதுப்புநில பரப்பு 16.68 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது.
இந்திய வனநிலை அறிக்கை 2019 மற்றும் இந்திய வனநிலை அறிக்க 2023 ன் படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சதுப்புநில பரப்பளவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2019-ல் 45 சதுர கிலோமீட்டராக இருந்த சதுப்புநில பரப்பளவு 2023 அறிக்கையின்படி, 41.91 சதுர கிலோமீட்டராக உள்ளது.
2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்படி, சதுப்பு நிலங்களை தனித்துவமான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாக பாதுகாப்பதற்கும் கடலோர வாழ்விடங்களில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி 2023 ஜூன் 5 முதல் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் கடற்கரை பகுதியில் சதுப்புநில காடு வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற இணையமைச்சர் திரு கீர்த்தின் வரதன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146358
***
AD/TS/GK/LDN/KR/DL
(Release ID: 2146499)