உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை அடைவது குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட 'உத்தராகண்ட் முதலீட்டு விழா 2025'-இல் மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 19 JUL 2025 8:00PM by PIB Chennai

உத்தராகண்டில் ₹1 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகள் நிறைவேற்றப்பட்டதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'உத்தராகண்ட்  முதலீட்டு விழா - 2025' விழா மற்றும் ₹1,271 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இந்த நிகழ்வில், உத்தராகண்ட் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி, சட்டமன்றத் தலைவர் திருமதி ரிது கந்தூரி பூஷன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் திரு அஜய் தாம்தா, யோக குரு பாபா ராம்தேவ் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

'உத்தராகண்ட்  முதலீட்டு விழா 2025'-ல் உரையாற்றிய திரு அமித் ஷா, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பிரதமர் திரு மோடி செயல்திட்டத்தை வகுத்துள்ளார் என்று கூறினார். உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்விக் கொள்கையில் தெளிவைக் கொண்டு வருதல், நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல், பொருளாதாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது என எந்தத் துறையாக இருந்தாலும், திரு மோடி, ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் 8 லட்சம் கிலோமீட்டர் புதிய சாலைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வசதியான 'வந்தே பாரத்' ரயில்கள் நாட்டின் 333 மாவட்டங்களை அடைந்துள்ளன. 45 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 88 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன, உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து 11 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிப் பணிகளின் விளைவாகவே திரு அடல் அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை 11வது இடத்திற்குக் கொண்டு வந்தார், இதை திரு மோடி 10 ஆண்டுகளில் 11வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு உயர்த்தியுள்ளார், என்று திரு ஷா தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் மாறப் போகிறோம் என்று அமைச்சர் கூறினார். உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டு தொழில்துறை மேம்பாடு ஏற்பட்டால், ஏழைகளின் நலன் பாதிக்கப்படும் என்ற கட்டுக்கதையை பிரதமர் திரு. நரேந்திர மோடி தகர்த்தெறிந்துள்ளார் என்று திரு. ஷா கூறினார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடையச் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். வளர்ந்த உத்தராகண்ட் இல்லாமல் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை. நமது சிறிய மாநிலங்கள் முன்னேறும் வரை, நாட்டில் சீரான வளர்ச்சி இருக்க முடியாது என்றும், அதேபோல், கிழக்குப் பிராந்திய மாநிலங்கள் முன்னேறும் வரை, நாட்டில் சீரான வளர்ச்சி இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். எனவே, சிறிய மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது, என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2146149

*****

RB/RJ


(Release ID: 2146218)