பாதுகாப்பு அமைச்சகம்
வெலிங்டனில் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் முப்படைகளின் தளபதி உரை
प्रविष्टि तिथि:
19 JUL 2025 5:52PM by PIB Chennai
முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் இன்று (ஜூலை 19, 2025) தமிழ்நாட்டின் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று, அங்கு 81-வது பாடத் திட்ட அதிகாரிகள், கல்லூரியின் ஊழியர்கள், அதிகாரிகளிடையே உரையாற்றினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய அவர், இந்திய ஆயுதப் படைகளின் வெற்றிகரமான நடவடிக்கைகளின் போது நிரூபிக்கப்பட்ட திறன்களை எடுத்துரைத்தார். பின்னர், கல்லூரியின் ஆசிரியர்களுடன் உரையாடிய அவர், ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுத்தன்மை, திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
45 வார காலம் நடைபெறும் 81-வது பாடத்திட்டம் தற்போது கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தற்போது இதில் 35 நட்பு நாடுகளைச் சேர்ந்த 45 பேர் உட்பட 500 மாணவ அதிகாரிகள் பயிற்சியில் உள்ளனர்.
***
(Release ID: 2146103)
AD/PLM/SG
(रिलीज़ आईडी: 2146119)
आगंतुक पटल : 33