இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
'போதைப்பொருள் ஒழிப்பு' என்ற கருப்பொருளுடன் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு வாரணாசியில் தொடங்கியது
மத, சமூகத் தலைவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா
Posted On:
19 JUL 2025 2:25PM by PIB Chennai
'வளர்ந்த இந்தியாவிற்கு போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்' என்ற கருப்பொருளுடன், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் 'இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை' நடத்துகிறது. இந்த உச்சிமாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 122 ஆன்மீக, சமூக-கலாச்சார அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நமது இளம் தலைமுறையினர் அரசு திட்டங்களின் பயனாளிகளாக மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து, நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார். போதைப்பொருள் தேச முன்னேற்றத்திற்கு கடுமையான சவாலாக அமைகிறது என அவர் கூறினார்.
இளைஞர்களிடையே போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வைப் பரப்ப மத, சமூகத் தலைவர்கள் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். ஒவ்வொரு நபரும் குறைந்தது ஐந்து பேரையாவது போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் சேர ஊக்குவிக்கும் வகையில் ஒரு மக்கள் இயக்கம் நமக்குத் தேவை என்று அவர் கூறினார்.
இந்த இரண்டு நாள் உச்சிமாநாடு மதிப்புமிக்க விவாதங்களுக்கும் அர்த்தமுள்ள முடிவுகளுக்கும் வழிவகுக்கும் என்று திரு மன்சுக் மண்டவியா கூறினார். நாளை (2025 ஜூலை 20) 'காசி பிரகடனம்' வெளியிடப்படுவதோடு உச்சிமாநாடு நிறைவடையும். இது இளைஞர்கள், ஆன்மீகத் தலைவர்களின் கூட்டுப் பார்வையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் ஆவணமாக அமையும். இந்த ஆவணம் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான விரிவான செயல் திட்டத்தை வழங்கும். அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பிலும் மறுவாழ்விலும் பணிபுரிவோருக்கு இது வழிகாட்டும் சாசனமாக செயல்படும்.
****
(Release ID: 2146041)
AD/PLM/SG
(Release ID: 2146068)