குடியரசுத் தலைவர் செயலகம்
அடிக்காபி சரளா தாசின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் மற்றும் கலிங்க ரத்னா விருது-2024 ஐ குடியரசுத்தலைவர் வழங்கினார்
Posted On:
15 JUL 2025 6:49PM by PIB Chennai
இந்திய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (ஜூலை 15, 2025) ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற அடிக்காபி சரளா தாசின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, கலிங்க ரத்னா விருது -2024 ஐ மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதானிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத்தலைவர், அடிக்காபி சரளா தாசுக்கு மரியாதை செலுத்தினார். மகாபாரதத்தை இயற்றியதன் மூலம் அடிக்காபி சரளா தாஸ் இந்திய இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளார் என்று அவர் கூறினார். சிறந்த கவிஞரின் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காகவும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்காகவும் 'சரளா சாகித்ய சன்சத்'-ஐ அவர் பாராட்டினார்.
கலிங்க ரத்னா விருதைப் பெற்றதற்காக திரு தர்மேந்திர பிரதானுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார். இலக்கிய விருதான 'சரளா சம்மான்' விருதைப் பெற்ற திரு பிஜயா நாயக்குக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
நமது பன்முகத்தன்மை வானவில் போன்றது என்று குடியரசுத்தலைவர் கூறினார். நமது ஒற்றுமை பல காலமாக மிகவும் வலுவானது. நம்மிடம் பல மொழிகள் உள்ளன, ஆனால் உணர்வு ஒன்றுதான். பல மொழிகள் மற்றும் பல மதங்களுக்கு மத்தியில் இந்தியா எவ்வாறு ஒற்றுமையாகவும் ஒருங்கிணைந்ததாகவும் உள்ளது என்பதைக் கண்டு உலகம் வியப்படைகிறது.
இந்திய கல்வி மரபை வளப்படுத்துவதில் இந்திய மொழிகள் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன என்று குடியரசுத்தலைவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை 2020 இல், தாய்மொழியில் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சியளிக்கிறது. தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகளை தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்க உதவும் என்று அவர் கூறினார். தாய்மொழியைத் தவிர மற்ற மொழிகளையும் ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144967
***
AD/RB/DL
(Release ID: 2145046)
Visitor Counter : 6