சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை விவரிக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிக்கை

प्रविष्टि तिथि: 15 JUL 2025 4:17PM by PIB Chennai

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2023-24 நிதியாண்டிற்கான இரண்டாவது நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய உறுதிமொழிகளுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணக்கமான செயல்பாடுகளையும், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை எதிர்காலம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அண்மையில் இந்த அறிக்கையை வெளியிட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்புக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.

2023-24 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் 20 சதவீதம் அதிகரித்த நிலையிலும் பசுமை இல்ல வாயு உமிழ்வு தன்மை கிலோமீட்டருக்கு 1.0 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடில் இருந்து 0.8 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடாக குறைந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2023-24 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளில் 631 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான அளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள், சாம்பல் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் நடும் பணிகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது 2023-24- நிதியாண்டில் 56 லட்சம் மரக்கன்றுகளும், 2024-25 நிதியாண்டில் 67 லட்சத்து 47 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.  இந்த முயற்சி கணிசமான அளவில் கார்பன் உமிழ்வை குறைத்து நெடுஞ்சாலைகளில் நேர்மறையான சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன.

முழுமையான அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணைய தளத்தில் https://nhai.gov.in/nhai/sites/default/files/2025-07/Sustainability-Report-of-NHAI-for-FY-2023-24.pdf காணலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144860

***

AD/TS/SM/GK/AG/KR


(रिलीज़ आईडी: 2144909) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Malayalam