நித்தி ஆயோக்
“வர்த்தக கண்காணிப்பு காலாண்டு” இதழின் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் புதுதில்லியில் வெளியிட்டது
Posted On:
14 JUL 2025 2:55PM by PIB Chennai
2025 - ம் நிதியாண்டின் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மூன்றாவது காலாண்டிற்கான "வர்த்தக கண்காணிப்பு" குறித்த வெளியீட்டின் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி இன்று (ஜூலை 14 - ம் தேதி) புது தில்லியில் வெளியிட்டார்.
இந்த காலாண்டு அறிக்கை இந்தியாவின் வர்த்தக நிலை குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குவதுடன், அமெரிக்க இறக்குமதி வரிக் கட்டமைப்புகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. இது சர்வதேச வர்த்தக நடைமுறைகளின் மறுசீரமைப்பு, இந்தியாவின் ஏற்றுமதி, போட்டித்தன்மை ஆகியவற்றில் அதன் தாக்கங்கள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
இந்த காலாண்டு பகுப்பாய்வு இந்தியாவின் வர்த்தக செயல்திறன், புவிசார் அரசியல் ஏற்ற இறக்கங்களுக்கு இடையே எச்சரிக்கையுடன் கூடிய நெகிழ்வுத்தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 2025-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், சரக்குகளின் ஏற்றுமதி 3% ($108.7 பில்லியனாக) அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், நாட்டின் இறக்குமதி 6.5% ($187.5 பில்லியனாக) உயர்ந்துள்ளது. மேலும், சேவைகள் ஏற்றுமதியில் $52.3 பில்லியன் டாலர் மதிப்பில் 17% வளர்ச்சி சேவை உபரி பற்றாக்குறை இடைவெளியை ஈடுசெய்ய உதவியது. இது உலகளாவிய சேவைகள் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. விமானம், விண்கலம் மற்றும் அதன் உதிரி பாகங்கள் போன்ற சில தயாரிப்புகள் ஆண்டுதோறும் 200%-க்கும் கூடுதலான வளர்ச்சியுடன் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடத்திற்குள் இந்தியா இருப்பதால், நாட்டின் ஏற்றுமதியில் நிலைத்தன்மை உள்ளது. கூடுதலாக, 2024 - ம் ஆண்டில் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் சேவைகள் ஏற்றுமதியில் $269 பில்லியன் டாலருடன் உலகின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. உயர் தொழில்நுட்பச் சாதனங்களின் ஏற்றுமதியும் 2014 - ம் ஆண்டு முதல் விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மின்சார இயந்திரங்கள், ஆயுதங்கள் / வெடிமருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் 10.6% -துடன் வலுவான நிலையில் உள்ளது.
இந்த காலாண்டின் வர்த்தகப் பகுப்பாய்வு குறித்த கருப்பொருள், வளர்ந்து வரும் அமெரிக்க வர்த்தகம், இறக்குமதி வரிவிதிப்பு கட்டமைப்புகள் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்துவதாகும். முக்கிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் இறக்குமதி வரி விகிதம், அமெரிக்க சந்தையில், குறிப்பாக மருந்துகள், ஜவுளி மற்றும் மின்சார இயந்திரங்கள் போன்ற துறைகளில் சந்தைப் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்குகிறது. வளர்ந்து வரும் உலகளாவிய வர்த்தக சூழல் புதிய வர்த்தக நடைமுறைகளில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் விர்மானி, அண்மையில், வர்த்தக நடைமுறைகள் குறித்த விரிவான பகுப்பாய்வு மற்றும் அதன் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இதை வெளியிட்டதற்காக இதில் ஈடுபட்டுள்ள முழு குழுவிற்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்தியாவின் வளர்ந்து வரும் வர்த்தக ஈடுபாடு, அதிகரித்து வரும் போட்டித்திறன், புதுமை மற்றும் அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இணைந்து, அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளில் இந்திய வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான உத்திசார் முயற்சிகளால் உந்தப்பட்ட பொருளாதாரத்தின் வலுவான முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
புவிசார் அரசியல் மாற்றங்கள், தொழில்நுட்ப மாற்றம், கொள்கைகள், நிச்சயமற்ற தன்மை, உலகளவில் வர்த்தக மறுவடிவமைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த தருணத்தில், இந்த பதிப்பானது கொள்கை வகுப்பாளர்கள், தொழில் மற்றும் கல்வியாளர்களுக்கு ஒரு மதிப்புமிக்க ஆதார மூலமாக செயல்படுகிறது என்றும் டாக்டர் விர்மானி எடுத்துரைத்தார். இது ஒட்டுமொத்த வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதற்கான எதிர்காலப் பரிந்துரைகளை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். இது உலகளவில் வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவின் வலுவான பங்கேற்பை உறுதி செய்கிறது.
***
(Release ID: 2144498)
AD/TS/SM/SV/AG/DL
(Release ID: 2144623)