நிலக்கரி அமைச்சகம்
பெண்களால் மட்டுமே நடத்தப்படும் முதலாவது மருத்துவமனையை இந்திய நிலக்கரி நிறுவனம் தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
14 JUL 2025 3:43PM by PIB Chennai
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வலுவான நடைமுறையின் ஒரு பகுதியாக பெண்களால் மட்டுமே நடத்தப்படும் வசந்த் விஹார் மருத்துவமனை பிலாஸ்பூரில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ளது. இது இந்திய நிலக்கரி நிறுவனத்தின் முதலாவது மருத்துவமனையாகும்.
இந்த மருத்துவமனையை தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு ஹரீஷ் துஹான் திறந்துவைத்தார். நிலக்கரி துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் குறிப்பிடத்தக்க முன்முயற்சியை இது குறிக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவிப்பணியாளர்கள் என 16 பெண்களைக் கொண்ட குழுவினரால் இந்த மருத்துவமனை நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு ஹரீஷ் துஹான், நிலக்கரி துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். எதிர்காலத்தில் பெண்களுக்கு தலைமைத்துவ வாய்ப்புகளை உருவாக்கவும், நிலக்கரி துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதில் புறநோயாளிகள் பிரிவு, அவசர மருத்துவ சேவைகள் பிரிவு உட்பட பலவகையான மருத்துவ சேவைகள் அளிப்பதற்கான வசதி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144513
***
AD/TS/SM/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2144620)
आगंतुक पटल : 8