வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து அவுரங்காபாத் தொழில் நகரத்தில் 20,000 சதுர அடி பரப்பளவில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் -டிபிஐஐடி செயலாளர் தகவல்

Posted On: 13 JUL 2025 12:14PM by PIB Chennai

அவுரிக் (AURIC) எனப்படும் அவுரங்காபாத் தொழில் நகரில் 20,000 சதுர அடி பரப்பளவில் திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்பட உள்ளது என தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT - டிபிஐஐடி) செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா கூறியுள்ளார். இது இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ-யுடன (CII) இணைந்து உருவாக்கப்படும் எனவும் அடுத்த வாரம் இதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

2025 ஜூலை 12 அன்று சத்ரபதி சம்பாஜி நகருக்குச் சென்ற அவர் அந்தப் பகுதி தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தார். அந்த பிராந்தியத்தின் தொழில்துறை சூழல் சார் அமைப்பை மேலும் மேம்படுத்த, உலகளாவிய திறன் மையத்தின் (GCC) முதலீடுகளை ஈர்ப்பதன் அவசியத்தையும், அவுரிக்-கில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதன் அவசியத்தையும் டிபிஐஐடி செயலாளர் வலியுறுத்தினார்.

இந்தப் பயணத்தின்போது டிபிஐஐடி செயலாளர் தலைமையில் ஒரு தொழில்துறை தொடர்பு அமர்வும் இடம்பெற்றது. இதில் சிஐஐ, ஃபிக்கி, அசோச்சம் போன்ற தொழில்துறை அமைப்புகள் உட்பட முக்கிய தரப்பினர் பங்கேற்றனர். மகாராஷ்டிராவை உற்பத்தி மற்றும் புதுமைக்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதற்கு அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் டிபிஐஐடி செயலாளர் வலியுறுத்தினார். இந்த அமர்வில் தொழில்துறை சங்கங்கள் மற்றும் மகாராஷ்டிரா அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

********

 

(Release ID: 2144338)

AD/TS/PLM/SG

 

 


(Release ID: 2144350)
Read this release in: English , Urdu , Marathi , Hindi