இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வுக்கு முழு அதிகாரம் அளிக்குமாறு ‘புதிய இந்தியா’வை மத்திய விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்

Posted On: 10 JUL 2025 7:26PM by PIB Chennai

ஜூலை 13 ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வின் 31வது பதிப்பிற்கு முன்னதாக, இந்த இயக்கத்திற்கு முழு உத்வேகம் அளிக்குமாறு மத்திய இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டு மற்றும் தொழிலாளர் நலன் & வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் 6,000+ இடங்களில் முழு வீச்சில் நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 50,000 பேர் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த வார இறுதியில் நடைபெறும் இந்த நிகழ்வின் 31வது பதிப்பின் சிறப்பம்சங்களில் ஒன்று முன்னாள் உலக மல்யுத்த பொழுதுபோக்கு சாம்பியனும் இந்தியாவின் ஒரே ஹெவிவெயிட் பட்டத்தை வென்றவருமான தி கிரேட் காளியின் பங்கேற்பாகும். 7 அடி உயரமுள்ள இவர், தேசிய தலைநகரின் மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும் இந்த மாபெரும் பேரணியை மற்ற புகழ்பெற்ற நபர்களுடன் இணைந்து வழிநடத்துவார்.

"கடந்த ஆண்டு டிசம்பரில் எளிமையாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, நாடு தழுவிய உடற்பயிற்சி புரட்சியாக மாறியுள்ளது, 11,000க்கும் மேற்பட்ட இடங்களை அடைந்து, லட்சக்கணக்கான குடிமக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'உடல் பருமன் இல்லாத இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை, ஒவ்வொரு செயல்முறையிலும் நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு, புதிய இந்தியாவின் உணர்வை மிதிவண்டியில் பிரதிபலிக்கட்டும், மேலும் ஆரோக்கியமான, வலிமையான மற்றும் துடிப்பான வளர்ந்த பாரதத்தை நோக்கி நம் பாதையை துரிதப்படுத்துவோம்", என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2143830

----

(Release ID: 2143830)

AD/RB/ DL


(Release ID: 2143898)