மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மீரட்டில் உத்தரப்பிரதேச வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்பு மையத்தையும் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியையும் அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
Posted On:
08 JUL 2025 5:17PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உத்தரப் பிரதேச வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்பு மையத்தையும் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியையும் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இன்று இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், காலத்தின் தேவைகளுக்கு ஏற்பவும், நாட்டின் விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையிலும் ஒரு பாடத்திட்டத்தை வடிவமைத்ததற்காக சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை பாராட்டினார். வளர்ச்சியடைந்த கிராமங்கள் மற்றும் செழுமைமிக்க விவசாயிகள் இன்றி வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வை முழுமையடையாது என்றும், இந்த முயற்சி அந்த திசையில் ஒரு அர்த்தமுள்ள, வரலாற்று சிறப்புமிக்க படியாகும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் தொழில்நுட்ப அடிப்படையிலான வேளாண் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தாம் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143139
***
AD/TS/IR/SG/DL
(Release ID: 2143196)