பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUL 2025 8:12AM by PIB Chennai

தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அன்பு, இரக்கம், பொறுமை, ஒழுக்கம் ஆகியவற்றின் நீடித்த அடையாளமாக புனித தலாய் லாமா திகழ்வதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவரது செய்தி அனைத்து நம்பிக்கைகளிலும் மரியாதையையும் போற்றுதலையும் தூண்டியுள்ளது என்று திரு நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எஸ்தலத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"புனித தலாய்லாமாவின் 90-வது பிறந்தநாளில் அவருக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் 140 கோடி இந்தியர்களுடன் நானும் இணைகிறேன். அவர் அன்பு, இரக்கம், பொறுமை, ஒழுக்கம் ஆகியவற்றின் நீடித்த அடையாளமாக இருந்து வருகிறார். அவரது செய்தி அனைத்து நம்பிக்கைகளிலும் மரியாதையையும் போற்றுதலையும் தூண்டியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். @DalaiLama"

****

(Release ID: 2142585)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2142668) வருகையாளர் எண்ணிக்கை : 37