நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் நுகர்வோர்களுக்கு ₹7.14 கோடி பணம் திருப்பியளிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 04 JUL 2025 1:40PM by PIB Chennai

தேசிய நுகர்வோர் உதவி எண் வாயிலாக கடந்த இரண்டு மாதங்களில் நுகர்வோர்கள் 7.14 கோடி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நடைமுறை வாயிலாக 30 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 15,426 கோரிக்கைகள் அடங்கிய நுகர்வோரின் குறைகளுக்கு திறம்பட தீர்வு காணப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் முக்கிய முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நுகர்வோரின் குறைகளை விரைவாகவும் இணக்கமாகவும் தீர்த்து வைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 - ன் கீழ் நுகர்வோர் ஆணையங்களின் பணிச் சுமையைக் குறைக்கிறது. 

குறிப்பாக, மின்னணு வர்த்தகத் துறை அதிக அளவிலான குறைகளைப் பதிவு செய்துள்ளது.  இத்துறையில் 8,919 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கேற்ப, அதிகபட்சமாக 3.69 கோடியைத்  திரும்பப் பெறுவதற்கு உதவப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை, 81 லட்சம் பணத்தைத் திரும்ப அளித்துள்ளது.

2025 - ம் ஆண்டு ஏப்ரல் 25 -ம் தேதி முதல் ஜூன் 30 - ம் தேதி வரை 7.14 கோடி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வசதி, ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு தரப்பினரின் வலுவான செயல்பாடுகள் தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் செயல்திறனை பிரதிபலிப்பதாக உள்ளது. இது சரியான தருணத்தில், தங்குதடையின்றி குறைகளுக்கு தீர்வு காண்பதை உறுதி செய்வதில் தேசிய நுகர்வோர் உதவி எண் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நுகர்வோர் நலன் மற்றும் சந்தை வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நம்பகமான தளமாகவும்   உள்ளது.

தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் பதிவுசெய்யப்பட்ட குறைகள் மற்றும் ஆவணங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த அதிகரிப்பு, குறிப்பாக அழைப்புகள், இணையதளம், வாட்ஸ்அப், தேசிய நுகர்வோர் உதவி எண் செயலி, உமாங் செயலி, சிபிக்ராம்ஸ், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால்  இயக்கப்பட்ட சாட்பாட் போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் தளத்தின் வளர்ந்து வரும் அணுகலைக் குறிக்கிறது. இது 01.06.2023 முதல் 31.05.2024 மற்றும் 01.06.2024 முதல் 31.05.2025 வரையிலான ஒப்பீட்டுத் தரவுகளில் பிரதிபலிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்கள் வழக்குப் பதிவு செய்வதற்கு முன் தங்களது குறைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் ஒரே மையமாக இந்த உதவி எண் உருவெடுத்துள்ளது. நுகர்வோர் தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 17 மொழிகளில் ஒரு மொழியில் பதிவு செய்யலாம். ஒருங்கிணைந்த குறைகளைத் தீர்க்கும் வழிமுறை, ஒரு ஆம்னி-சேனல், மத்திய தகவல்தொடர்பு இணையதளங்கள் மூலமாகவும் குறைகளைச் சமர்ப்பிக்கலாம். இதற்காக, வாட்ஸ்அப் (8800001915), குறுஞ்செய்தி (8800001915), மின்னஞ்சல் (nch-ca[at]gov[dot]in), தேசிய நுகர்வோர் உதவி  எண் செயலி, இணையதளம் (consumerhelpline.gov.in) மற்றும் நுகர்வோருக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதியை வழங்கும் உமாங் செயலி உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கின்றன.

நுகர்வோர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தத் துறை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும் அனைத்து நுகர்வோரும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் சரியான நேரத்தில் தீர்வு காணவும் இந்த தேசிய நுகர்வோர் உதவி எண்ணை  பயன்படுத்துமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142115

******

AD/TS/SV/KPG/SG

 

 

 


(रिलीज़ आईडी: 2142256) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu