பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சாவித்ரிபாய் பூலே தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய பிராந்திய மையத்தை ராஞ்சியில் மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி நாளை திறந்து வைக்கிறார்
Posted On:
03 JUL 2025 4:01PM by PIB Chennai
ஜார்க்கண்டின் ராஞ்சியில் சாவித்ரிபாய் பூலே தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய பிராந்திய மையத்தை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி நாளை (04.07.2025) திறந்து வைக்கிறார். விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது அந்த மையத்தில் பயிற்சி பெறும் பெண்களுடனான உரையாடல், அனுபவப் பகிர்வு நிகழ்வுகள் நடைபெறும். தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும் இதில் இடம்பெறும்.
நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் திறன் மேம்பாட்டு முயற்சிகளை பரவலாக்குவதிலும் சேவை வழங்கலை மேம்படுத்துவதிலும் இந்த புதிய பிராந்திய மையம் முக்கியப் பங்கு வகிக்கும். இது அமைச்சகத்தின் முதன்மை முயற்சிகளான மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா, மிஷன் சக்ஷம் அங்கன்வாடி, போஷன் 2.0 எனப்படும் ஊட்டச்சத்து இயக்கம் ஆகியவை தொடர்பான செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும். ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் இந்த மையம் கவனம் செலுத்தும். உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்வதிலும், மத்திய அரசின் திட்டங்களை அடித்தட்டு அளவில் பயனாளிகளுக்கு கொண்டு செல்வதிலும் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141801
**
AD/TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2141886)