பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தெலங்கானாவில் குடிமைப்பணியாளர்களின் பணித் திறனை வலுப்படுத்துதல்: மிஷன் கர்மயோகி குழுவினர் தெலங்கானா ஆளுநரையும், தலைமைச் செயலாளரையும் சந்தித்தனர்
Posted On:
03 JUL 2025 1:08PM by PIB Chennai
மிஷன் கர்மயோகி குழுவினர் தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மாவை 2025 ஜூலை 02 அன்று ஐதராபாத்தில் சந்தித்தனர். டாக்டர் அல்கா மிட்டல் (திறன் கட்டமைப்பு ஆணையத்தின் நிர்வாகப் பிரிவு உறுப்பினர்) தலைமையிலான குழுவில் திருமதி நவ்நீத் கவுர் (திறன் கட்டமைப்பு ஆணைய இயக்குநர்), திருமதி சௌமி பானர்ஜி (கர்மயோகி பாரத், பொது மேலாளர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இம்மாநிலத்தில் மிஷன் கர்மயோகி அமலாக்கம் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்த இந்தக் குழுவினர் இதனை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிகாட்டுதலையும் கோரினர்.
இந்த முன்முயற்சிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திய ஆளுநர், மாற்றத்திற்கான இந்த இயக்கத்தை மாநிலத்தில் முன்னோக்கி கொண்டு செல்லுமாறு குழுவினரை ஊக்கப்படுத்தினார்.
முன்னதாக மிஷன் கர்மயோகி குழுவினர் தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் திரு கே ராமகிருஷ்ண ராவை சந்தித்தனர். பல்வேறு துறைகளின் தலைவர்களும் பங்கேற்ற இந்த சந்திப்பின் போது மிஷன் கர்மயோகி பற்றி இந்தக் குழுவினர் விரிவாக விளக்கம் அளித்தனர்.
ஆளுநரின் செயலகமும், தலைமைச் செயலாளரும், தெலங்கானா மாநில நிர்வாகமும் காட்டிய ஆதரவுக்கு திறன் கட்டமைப்பு ஆணையம் பாராட்டு தெரிவித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141751
*********
AD/TS/SMB/AG/KR
(Release ID: 2141836)