தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிற சமூகத்தைச் சேர்ந்த சிலர் எஸ்சி சமூகத்தினர் இரண்டு பேரை கொடுமைப்படுத்தியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொள்கிறது

Posted On: 02 JUL 2025 1:39PM by PIB Chennai

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், பிற சமூகத்தைச் சேர்ந்த சிலர், சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை அடித்து, புற்களை உண்ணவும், வடிகால் நீரை குடிக்கவும் கட்டாயப்படுத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உள்ளது. அவர்களின் மொபைல் போன்கள் பறிக்கப்பட்டதாகவும், அவர்களின் தலைமுடிகள் வெட்டப்பட்டு வலுக்கட்டாயமாக மொட்டையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், இது மனித உரிமைகளை மீறுவதாக ஆணையம் கருதுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு கோரி, ஒடிசா தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, ஏதேனும் இருந்தால், அந்த அறிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****

(Release ID: 2141475)

AD/TS/IR/KPG/KR


(Release ID: 2141576) Visitor Counter : 2