குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதலாவது பட்டமளிப்பு விழா குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 30 JUN 2025 6:51PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இன்று (ஜூன் 30, 2025) நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை, சிறப்பான  மருத்துவ வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களைக் கொண்டுள்ள மருத்துவமனையாக எய்ம்ஸ் திகழ்கிறது என்று கூறினார். நாட்டின் மருத்துவத் திறனின் அடையாளமாக எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது என்று அவர் கூறினார்.  இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் புதிய நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். இந்தியாவில் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைத் துறையில் எய்ம்ஸ் மிக உயர்ந்த தரத்தை நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  புதிய அறுவை சிகிச்சை தொழில்நுட்பம், தொடக்கக்கால நோய் கண்டறியும் கருவி, ஆயுஷ் மற்றும் அலோபதி மருத்துவ முறையின் கலவையுடன் கூடிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் புதுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவிய  நோக்கத்துடனேயே அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் நிறுவப்படுவதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் வகையில், கோரக்பூர் எய்ம்ஸ் மற்றும் நாட்டில் உள்ள பிற எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140890

---- 

AD/TS/SV/KPG/DL


(Release ID: 2140916)