இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மண்டவியா, திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
30 JUN 2025 5:33PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மை பாரத் தளம் தற்போது மை பாரத் 2.0 ஆக மேம்படுத்தப்படுகிறது. இதில், பயனர் அனுபவம், அணுகல், செயல்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன. கட்டமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தி மை பாரத் தளம் முழுமையாக மீண்டும் கட்டமைக்கப்படும். கூடுதலாக, ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தொழில்நுட்பங்கள் மூலம் மொபைல் பயன்பாடுகளும் உருவாக்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரே தீர்வாக மை பாரத் அமைப்பைக் கருதியதாக தெரிவித்தார். மை பாரத் 2.0 என்பது, இளைஞர்களை, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுடன் இணைக்கும் ஒற்றை சாளர டிஜிட்டல் சூழல் சார் அமைப்பு என்றும் அவர் கூறினார். ஏற்கனவே 1.75 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் இணைந்த இந்த தளம், வெறும் டிஜிட்டல் கருவி மட்டுமல்ல, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நோக்கத்துடன் இளைஞர்களின் விருப்பங்களை இணைப்பதற்கான ஒரு இயக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மை பாரத் 2.0 மூலம், இளைஞர்களின் விருப்பங்களை தேசிய பாரதத்தின் அடித்தளமாக மாற்றும் வகையில் சிறந்த ஒருங்கிணைப்பு, ஆழமான ஒத்துழைப்பு மற்றும் ஒரு துணிச்சலான புதிய திசையை நோக்கி நாங்கள் முன்னேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்கள் தலைவர்களாகவும் தேசத்தைக் கட்டி எழுப்புபவர்களாகவும் உள்ளனர் என்று கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இளைஞர்களுக்காக விளையாட்டு, தொழில்நுட்பம், கல்வி உட்பட பல்வேறு துறைகளை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140836
***
AD/TS/GK/LDN/KR/DL
(Release ID: 2140898)