புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயோமாஸ் (உயிரிப் பொருள் திரள்) திட்ட வழிகாட்டுதல்களில் முக்கிய திருத்தங்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 28 JUN 2025 8:51AM by PIB Chennai

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பயோமாஸ் திட்டத்தின் கட்டம்-I-ன் கீழ் பயோமாஸ் எனப்படும் உயிரி எரிபொருள் திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது 202122 முதல் 202526 வரையிலான நிதியாண்டிற்குப் பொருந்தும். இந்தத் திருத்தங்கள் தூய்மையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவித்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், இந்தியா முழுவதும் பயோமாஸ் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

புதிய கட்டமைப்பின் கீழ், காகித கோப்புகள் மூலமான பணிகளைக் குறைத்தல், ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற பல செயல்முறைகளை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது. இது இந்த தொழில்துறையில் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள தங்கள் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இந்த மாற்றங்கள், 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பரந்த இலக்கை அடையவும், பயிர்க் கழிவு மேலாண்மை தொடர்பான முன்னேற்றத்தை அடையவும் பங்களிக்கும்.

இந்த திருத்தத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, எஸ்சிஏடிஏ போன்ற உயர் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பதிலாக ஐஓடி அடிப்படையிலான கண்காணிப்பு தீர்வுகள் அல்லது காலாண்டு தரவு சமர்ப்பிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு செய்வதாகும். இந்த செலவு குறைந்த நடவடிக்கை, குறிப்பாக சிறு வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.

மேலும், மத்திய நிதி உதவி (CFA) அம்சங்களின் கீழ் மானிய விநியோக வழிமுறை செயல்திறன் அடிப்படையிலானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. முழு அளவில் திறன் வாய்ந்த முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழு நிதி உதவியைப் பெறும். அதே நேரத்தில் குறைந்த செயல்திறனுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விகிதாசார அடிப்படையில் நிதி கிடைக்கும்.

இந்தத் திருத்தங்கள் பயோமாஸ் திட்டத்தை சீராக செயல்படுத்துவதற்கும், செயல்பாட்டுக்கு வந்த ஆலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவியை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் மட்டுமல்லாமல், இந்த துறை முழுவதையும் ஊக்குவிக்கும்.

*****

 

(Release ID: 2140327)

AD/TS/PLM/SG

 

 

 


(Release ID: 2140433) Visitor Counter : 7