எரிசக்தி அமைச்சகம்
மின் பாதுகாப்பு தினத்தையொட்டி மின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் பங்கேற்றார்
Posted On:
28 JUN 2025 11:03AM by PIB Chennai
2025 ஜூன் 26 அன்று மின் பாதுகாப்பு தினம் கொண்டாட்டப்பட்டது. இதனையொட்டி அன்றைய தினம் மத்திய மின் அமைச்சகத்தின் மத்திய மின்சார ஆணையம் புது தில்லியில் மின் பாதுகாப்பு தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நாட்டின் சுத்தமான, நவீன எரிசக்தி லட்சியங்களுடன் இணைந்து சிறந்த மின் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக இது அமைந்தது.
இந்தியாவின் நவீன எரிசக்தி பயணத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் பாதுகாப்பை இணைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொண்டாட்டம் எடுத்துக் காட்டியது. குறிப்பாக பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள், மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு, மேற்கூரை சூரிய சக்தி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சூழலில் இந்த பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் தொடங்கி வைத்தார், அவர் இந்தியாவின் விரைவான எரிசக்தி மாற்றத்துடன் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். அவருடன் மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் திரு கன்ஷ்யாம் பிரசாத் உள்ளிட்டோரும் மின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்
****
(Release ID: 2140342)
AD/TS/PLM/SG
(Release ID: 2140378)
Visitor Counter : 2