கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா- பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 27 JUN 2025 5:39PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜூன் 28)  ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ஜெயின் ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஆச்சாரியா வித்யானந்த் மகராஜ் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம், தில்லியில் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நூற்றாண்டு விழா 2025 ஜூன் 28 முதல் 2026 ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ், கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் பகுதியில் 1925 ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே தீட்சை பெற்ற அவர், 8,000-க்கும் மேற்பட்ட சமண ஆகமங்களை மனப்பாடம் செய்து, சிறந்த சமண அறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தார். சமண தரிசனம், அனேகாந்த்வாத் மற்றும் மோக்ஷமார்க் தரிசனம் உள்ளிட்ட சமண தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்த 50-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். கயோத்சர்க தியானம், பிரம்மச்சாரியத்தை முறையாக கடைபிடித்து, பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களில் காலணி இன்றி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

1975 ஆம் ஆண்டு, பகவான் மகாவீரரின் 2500வது  பெருவிழாவையொட்டி, அனைத்து முக்கிய சமணப் பிரிவுகளின் ஒப்புதலுடன், அதிகாரப்பூர்வ சமணக் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியதில் ஆச்சார்ய வித்யானந்த் முக்கியப் பங்காற்றினார்.

தில்லி, வைஷாலி, இந்தூர், ஷ்ரவணபெலகோலா உட்பட நாடு முழுவதும் உள்ள பண்டைய சமண கோயில்களை மறுசீரமைப்பு செய்யும் பணியில் அவர் முக்கிய பங்காற்றினார். பீகாரில் உள்ள குந்த்கிராம் (இப்போது பசோகுண்ட்) இடத்தை பகவான் மகாவீரரின் பிறப்பிடமாக அவர் அடையாளம் கண்டறிந்தார். இது பின்னர் 1956-ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140206

***

AD/TS/GK/AG/DL


(Release ID: 2140255)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati